மேற்கு வங்கம்: பா.ஜ. எம்.பி. வீட்டின் அருகே வெடிகுண்டு வீச்சு! சட்டம், ஒழுங்கு கேள்விக்குறி என்று ஆளுநர் குற்றச்சாட்டு !

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் வீட்டின் அருகே 3 பேர், நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ்தான் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2021-09-08 08:19 GMT

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் வீட்டின் அருகே 3 பேர், நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ்தான் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பாரக்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளவர் அர்ஜூன் சிங், இவர் கடந்த 2019ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து மீண்டும் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வீடு ஜகதால் பகுதியில் அமைந்துள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு டூ வீலரில் வந்த 3 பேர் அர்ஜூன் சிங் வீட்டின் அருகாமையில் 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளது.


இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் கதவு லேசாக சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தற்போது அர்ஜூன் சிங் டெல்லியில் உள்ளார். வெடிகுண்டு வீச்சு சம்பவம் கேள்விப்பட்ட உடனேயே சொந்த ஊர் திரும்புவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கார், வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. ஒரு எம்.பி.யின் வீட்டின் அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் சட்டம், ஒழுங்கு பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தகுந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளேன். மேலும், எம்.பி.யின் பாதுகாப்புக்கு முதலமைச்சர் மம்தா தடை ஏற்படுத்தியுள்ளார் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் எம்.பி. வீட்டின் அருகே வெடிகுண்டு வீசியுள்ளது என வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News