எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் - நீண்ட தூர தாக்குதல் ஏவுகணையை சோதித்த இந்தியா!

Update: 2022-12-17 04:16 GMT

அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், சீனா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தியா இந்த சாதனை படைத்துள்ளது. 

அக்னி-5 5,000 முதல் 5,500 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும். இது சீனாவின் தலைநகரான பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களை குறி வைக்க முடியும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை சாலை மற்றும் ரயில் தளங்களில் இருந்து ஏவ முடியும். அக்னி-5 2012ஆம் ஆண்டு முதல் பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

 ஏவுகணையில் உள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைச் சரிபார்க்க சமீபத்திய சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏவுகணையின் செயல்திறன் ரேடார்கள், ரேஞ்ச் ஸ்டேஷன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இலக்கை அக்னி–5 ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேச எல்லையில் சீன படையினருடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Input From; DT

Similar News