வேலைக்கு ஏன் போற.. போனிலியே ‘தலாக்’ கொடுத்த கணவன்.. பெண்களுக்கு இவர்கள் அளிக்கும் முன்னுரிமை இதுதானா.!
வேலைக்கு ஏன் போற.. போனிலியே ‘தலாக்’ கொடுத்த கணவன்.. பெண்களுக்கு இவர்கள் அளிக்கும் முன்னுரிமை இதுதானா.!
அழகு நிலையத்தில் வேலை பார்த்த மனைவியை அவரின் கணவர் போனிலேயே ‘தலாக்’ கொடுத்த சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகேயுள்ள அகமதுநகர் மாவட்டத்தில் 31 வயது மதிக்கக்தக்க ஒரு பெண் அழகு நிலைய படிப்பு படித்து விட்டு துபாயில் பணியாற்றினார். அவரின் கணவரோடு கடந்த வருடம் மும்பைக்கு திரும்பிய அவர் அங்குள்ள அகமது நகரில் மூன்று வயது மகளோடு வசித்து வந்தார்.
இந்நிலையில் அந்த பெண் அங்குள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு போவது அவரின் கணவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தன்னுடைய மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அவரின் மனைவியோ குடும்ப செலவுக்கும் தன்னுடைய செலவுக்கும் பணம் வேண்டும் அதனால்தான் நான் அழகு நிலைய வேலைக்கு போகிறேன் என கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகப்பட்ட அவரின் கணவர் அந்த பெண்ணை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் அந்த பெண்ணுக்கு கடந்த 20ம் தேதி அன்று போன் செய்தார். அப்போது போனை எடுத்த அந்த பெண்ணிடம் இஸ்லாம் மத வழக்கப்படி மூன்று முறை தலாக் சொல்லியுள்ளார். அப்படி தலாக் சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம் உறவை தொடர விருப்பம் இல்லை, மேலும் இனி வீட்டிற்குக்கு மனைவியை பார்க்க வரமுடியாது எனவும் கூறியுள்ளார். இனிமேல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரின் கணவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
அதனால் அந்த பெண் தனனுடைய கணவர் மீது அஹ்மத்நகரில் உள்ள பிங்கர் முகாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை அந்த கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இஸ்லாமிய நடைமுறைப்படி உடனடி விவாகரத்து செய்வதற்கு இந்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அனைவரும் சமம் என்றும் பெண்களுக்கான உரிமை எப்படியும் பாதிக்கப்படக் கூடாது என்று மத்தியில் உள்ள பாஜக அரசு பல்வேறு சட்டங்களை ஏற்றினாலும், இது போன்ற இஸ்லாமியர்கள் சில சட்டங்களை மதிக்காமல் நடப்பது ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.