உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்தியா அனுமதி!
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தப்படும் iNCOVACCஎன்ற கொரோனா தடுப்பு மருந்தை, வாஷிங்டன் பல்கலைக்கழத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியதும் இந்த நிறுவனம் தான்.
உலகிலேயே முதல்முறையாக, மூக்கு வழியாக செலுத்தப்படும் iNCOVACCகொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பு மருந்தை, அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில், பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அனைத்து கட்டப் பரிசோதனையிலும் தேர்ச்சி அடைந்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பு மருந்து, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது.
எதிர்காலத்தில் ஏற்படும் வைரஸ் தாக்குதலை சரியான முறையில் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாரத் பயோடெக் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா கூறினார்.
Input From: Indian Express