YSRCP தலைவர் D ரேவதி டோல் பிளாசா ஊழியர்களை அறைந்த வைரல் வீடியோ.!

YSRCP தலைவர் D ரேவதி டோல் பிளாசா ஊழியர்களை அறைந்த வைரல் வீடியோ.!

Update: 2020-12-10 13:21 GMT

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின்(YSRCP) தலைவர் D ரேவதி ஆந்திரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் வேலைசெய்யும் ஊழியர்களைத் தாக்குவது காண முடிந்தது. 

இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டம் உள்ள காஜா டோலில் நடந்துள்ளது. YSRCP தலைவர் சுங்க வரி செலுத்த மறுத்ததை அடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விளைவாக டோல் பிளாசா ஊழியரை அவர் அறைந்துள்ளார். 

அந்த வீடியோவில், முதலில் D ரேவதி டோல் பிளாசாவில் உள்ள தடுப்பை எடுக்க முயன்றுள்ளார் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைக் காண முடிந்தது. ரேவதியின் ஆணவத்தால், அவர் அந்த தடுப்பை எடுக்க முயன்றபோது தடுக்க முயன்ற ஊழியர் அவர் அறைந்தார். அதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது. 

YSRCP கட்சியின் அட்டூழியம் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் கூட கூறப்பட்டது. 'அமராவதி ஊழலுக்கு' CBI விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்துத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை YSRCP தலைவர்கள்  விமர்சித்து  வருகின்றனர். 

Similar News