பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் லாரி ஏற்றி கொலை!

Update: 2021-06-23 07:05 GMT

குஜராத்தில் பசு கடத்தலை தடுக்க முயன்ற பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவரை லாரி ஏற்றி கடத்தல் கும்பல் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாவட்டம் வல்சாத் மாவட்ட கிராமத்திலிருந்து பசுக்களை வாங்கி அவற்றை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கடத்துவதை ஒரு கும்பல் தொழிலாக செய்து வருகிறது. அதனை தடுப்பதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் தர்மாபூர் வல்சாத் சாலை வழியாக ஒரு கும்பல் பசுவை கடத்தி செல்வதாக பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஹர்திக் கன்சாரா மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்த இருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் வாகனம் செல்லும் பாதையில் தடுப்பை ஏற்படுத்த முயன்றனர். அப்போது வாகனத்தை வேகமாக இயக்கிய கடத்தல் கும்பல் ஹர்திக் மீது வாகனத்தை ஏற்றியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து கடத்தல்காரர்கள் சிறிது தூரம் சென்றவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். அப்போது வாகனத்தில் இருந்த 11 பசுக்களை காவல்துறையினர் மீட்டனர். பின்னர் காவல் துறையினரின் விசாரணையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களின் கூட்டாளிகளான மேலும் 10 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாவித் ஷேக், ஜமால் ஷேக், ஹாலில் ஷேக் என்பது தெரியவந்துள்ளது.

பசு பாதுகாப்பு அமைப்பை தெரிந்தவரை வாகனம் ஏற்றி கடத்தல்காரர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News