நீண்ட நேரம் பசியே எடுக்காமல் இருப்பதற்கு, முக்கிய காரணமே இதுதான்: சரி செய்வது எப்படி?
ஒருவருடைய உடலின் ஆற்றல் குறையும் போது தான் பசி எடுக்கும். ஆனால் அதே சமயம் குறைந்த இரத்த சர்க்கரை அளவு இருந்தாலும் அல்லது சில பசியின்மை ஹார்மோன்களின் அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. அதே போல மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் தான் நம் பசியின் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. உடல் சீராக இயங்கி எந்த பிரச்சினையும் இல்லாத போது எந்த சிக்கலும் இல்லாமல் சாதாரணமாக நாம் உணரும் பொழுது தான் பசி உணர்வு ஏற்படும்.
ஆனால் சில காரணங்களால் சிலருக்கு சில சமயங்களில் பசி உணர்வு உண்டாகாமல் போகலாம். அதை எப்படி சரி செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். தினசரி வாழ்வில் நடக்கும் ஏதேனும் பிரச்சினையின் காரணமாக நாள் முழுவதும் நீங்கள் கவலையுடன் இருந்தால், கவலை உங்கள் பசி உணர்வைப் பாதிக்கும். இதனால் செரிமானம் சரியாக ஆகாமல் பசியைக் குறைக்கும் சில ஹார்மோன்களை வெளியாகக்கூடும். மனச்சோர்வு ஏற்பட்டாலும் பசியின்மை பிரச்சினை இருக்கும்.
ஆரோக்கியமாக இல்லையென்றாலும் பசி உணர்வைத் தூண்ட கொஞ்சம் உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட்டுவிட்டு பிறகு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளலாம். என்னதான் கவலை, மனக்கஷ்டமாக இருந்தாலும், சாப்பிடாமல் உடலை வருத்தக்கூடாது. சரியான நேரத்துக்கு சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். மேற்சொன்ன காரணங்களால் தான் பசியின்மை ஏற்படும் என்பதில்லை, வேறு சில பிரச்சினைகளுக்கும் பசியின்மை ஆரம்பமாக இருக்கலாம் என்பதால் தொடர்ந்து பசியின்மை இருந்தால் அனுபவமுள்ள மருத்துவரை அணுகுவது நன்மை பயக்கும்.