பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இயற்கை மருந்து!

Update: 2021-07-17 00:30 GMT

ஒருவரின் உடலின் காயம், வலி என ஏதாவது ஏற்பட்டால் பொதுவாக எல்லோர் வீட்டிலும் பரிந்துரைக்கப்படுவது தேங்காய் எண்ணெய் தான். ஆனால் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் மட்டுமில்லாமல் வேறு சில இயற்கை எண்ணெய்களும் பல உடல்நல நன்மைகளை வழங்கக்கூடியவை தான்.அப்படி பல சிறப்புகள் வாய்ந்தது தான் பூண்டு எண்ணெய். இந்த பூண்டு எண்ணெய்க்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. 


காதுகளில் ஏற்படும் பூஞ்சை தோற்று, முகப்பரு, மூட்டு வலி, தவைமுடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க கூடிய அளவிற்கு பூண்டு எண்ணெயில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க தேங்காய் எண்ணெய் உடன் பூண்டு எண்ணெயைச் சேர்த்து கலந்து தடவலாம். இதற்கு முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி அதில் இரண்டு பல் பூண்டு பற்களை நசுக்கி சேர்க்க வேண்டும்.


எண்ணெயின் நிறம் மாறியதும் அதனை ஒரு காட்டன் துணியில் ஊற்றி கசக்கி பிழிந்து வரும் அந்த எண்ணெயை தொற்று இருக்கும் இருக்கும் காதில் பயன்படுத்தி வந்தால் வலி குறையும். உள் காதில் இருக்கும் தொற்றுக்கு இதனை பயன்படுத்த வேண்டாம். இந்த பூண்டு எண்ணெயை மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற தடவி வரலாம். அதற்கு ஒரு கப்பில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதில் பத்து துளி பூண்டு எண்ணெயை விட்டு கலந்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளலாம். இது வீக்கத்தை குறைத்து வலியில் இருந்து நிவாரணம் தரும். 

Similar News