இனி புற்களுக்கு பதில் மாடுகளுக்கு சாக்லேட் தாங்க., மத்தியபிரதேச பல்கலைகழகத்தின் புதிய கண்டுபிடிப்பு !

மத்திய பிரதேச பலகலைகழகம் மாடுகளின் பால் உற்பத்தியை மேம்படுத்த புதிய வழிமுறையை கண்ட

Update: 2021-10-15 23:30 GMT

மாடுகளுக்கு தீவனத்திற்கு பதிலாக சாக்லேட் கொடுக்கலாம் என மத்தியபிரதேச பல்கலைகழகத்தில் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக மாடுகளுக்கு வைக்கோ, புல், பருத்திகொட்டை போன்றவை உணவாக கொடுப்போம். அதனால் அவை பால் தரும். ஆனால், மாடுகளுக்கு வெறும் சாக்லேட் தந்தால் அவை பால் சுரக்கும் என மத்திய ஜபால்பூரை மையமாக கொண்ட கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அந்த பல்கலைகழகம் உருவாக்கியுள்ள பல்வகை வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட சாக்லேட் மாடுகளின் பால் உற்பத்தி திறனையும் இனபெருக்கத்தையும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த சாக்லேட்டை விரைவில் மாநிலம் முழுவதும் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்படுள்ளது. இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

Source:Maalaimalar

Similar News