நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: பதவி நீக்க தீர்மானத்துக்கு எதிர்ப்பு!!

By :  G Pradeep
Update: 2025-12-22 17:11 GMT

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுக-காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த தீர்மானத்தை நிராகரிக்க கோரி மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நீதிபதி சுவாமிநாதன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து லட்சக்கணக்கான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மாநில அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் பதவி நீக்கம் செய்ய முயற்சி நடக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும்.

நீதித்துறையை பாதுகாக்கவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

Tags:    

Similar News