பிரதமர் மோடி சென்னை வருகையின் போது கூட்டணி பேச்சுக்கு வாய்ப்பு!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு தகவல்!
By : G Pradeep
Update: 2026-01-13 15:47 GMT
பிரதமர் மோடி வரும் 23ம் தேதி சென்னை வருகை தர உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டி கோயில் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நயினார் நாகேந்திரன், "பிரதமர் மோடி மதுரை வரும் அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது" என்றார்.
கூட்டணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா முடிவு செய்வார்கள் என்றும், பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.