இந்த ஆண்டு ஜூலை வரை இந்தியாவிலிருந்து 47.5 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி!

Update: 2021-07-11 06:12 GMT

தற்போதைய 2021 - 2022 நிதியாண்டில் இதுவரை சர்க்கரை ஆலைகள் 4.75 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் மற்றும் அதில் அதிகபட்சமாக இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைப்பான AISTA தெரிவித்துள்ளது.


இந்த ஜனவரியில் உணவு அமைச்சகம் ஒதுக்கீடு செய்த 6 மில்லியனை விட மில்கள் 5.9 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக அனைத்து இந்தியச் சர்க்கரை ஏற்றுமதி வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4,30,000 டன் சர்க்கரை OGL கீழ் மானிய ஆதரவு இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஈரானுக்குச் சர்க்கரை ஏற்றுமதி சிறியளவில் தொடங்கியுள்ளது. ஜூனில் 6,982 டன் சர்க்கரை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மேலும் அது குறிப்பிட்டது. சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டுக்கு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நடைபெறுகின்றது.

2021 ஜனவரி 1 முதல் ஜூலை 6 வரை சர்க்கரை ஆலைகள் 4.75 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளதாக AISTA தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக இந்தோனேசியாவிற்கு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு 5,82,776 டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 4,47,097 டன் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு 3,63,972 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

AISTA தலைவர் பிரபுல் விதலினி தெரிவித்தபடி, "இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 6.7 மில்லியன் டன்னை தாண்டியுள்ளது. அதில் 7,00,000 டன் OGL கீழ் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

"சர்க்கரை உற்பத்தி 2020-21 யை விட அதிகமாக உள்ளது. ஏற்றுமதி அடுத்த பருவத்திலும் தொடரும்," என்று அவர் குறிப்பிட்டார்.


"உலக சந்தைகளில் சர்க்கரை தேவையின் தற்போதைய நிலைமை வரும் மாதங்களில் சர்வதேச விலைகள் உறுதியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று AISTA மேலும் குறிப்பிட்டது.

Source: Economic Times

Similar News