கொரோனாவால் 100 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு செல்வர்.. ஐநா அதிர்ச்சி தகவல்.!

கொரோனாவால் 100 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு செல்வர்.. ஐநா அதிர்ச்சி தகவல்.!

Update: 2020-12-08 10:21 GMT

கொரோனா வைரஸ் ஏழ்மை நாடுகளை மட்டுமின்றி வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகமானவர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு 100 கோடிக்கு அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என்று ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் கடுமையான தாக்கத்தால் அடுத்த 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 20.7 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம், இது உலகில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை 100 கோடிக்கும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என ஐநா வளர்ச்சித் திட்டத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் பல விளைவுகளை ஐநா மதிப்பீடு செய்து வந்த நிலையில், கொரோனா தோற்று நோயின் நீண்ட கால விளைவுகளையும் மதிப்பீடு செய்து வந்தது. அதன் அடிப்படையில் இந்த தொற்றுநோய் 20.7 கோடி மக்களை கூடுதலாக வறுமையில் தள்ள கூடுமென்றும், 2030ம் ஆண்டுக்குள் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பார்கள் என்றும் ஐநாவின் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Similar News