காலமானா 104 வயதான ஹாலிவுட் நடிகை - கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.!

காலமானா 104 வயதான ஹாலிவுட் நடிகை - கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.!

Update: 2020-07-27 12:14 GMT

சுமார் 104 வயதான ஹாலிவுட் நடிகை தற்போது உடல்நலக் குறைவால் காலமானார். இவர் நிறைய படங்கள் நடித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவருடைய பெயர் பிரபல ஹாலிவுட் நடிகையான ஒலிவியா டி ஹேவிலேண்ட். த அட்வென்சர்ஸ் ஆப் ராபின் ஹுட் (1938) என்று படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர். மேலும் சுமார் 49 ஹாலிவுட் படங்கள் நடித்து பிரபலமடைந்தவர் இவர். இவர் பிரபல நடிகையான நடிகை ஜோன் ஃபான்டைனின் சகோதரி ஆவர்.

இவர் 49 ஹாலிவுட் படங்கள் நடித்து அதில் இரண்டு படங்களுக்கு தன் நடிப்புத் திறமையால் ஆஸ்கார் விருதை வென்றவர். பாரிஸ் நகரில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவாலும், வயது மூப்பின் காரணமாகவும் 104 வயதில் மரணமடைந்தார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.இவர்களது பழங்கால நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News