தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்கு கொரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பை மாளிக்க, மத்திய அரசு மூன்றாம் தவணையாக ரூ.6,195 கோடி நிதி விடுவிப்பு.!

தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்கு கொரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பை மாளிக்க, மத்திய அரசு மூன்றாம் தவணையாக ரூ.6,195 கோடி நிதி விடுவிப்பு.!

Update: 2020-06-11 11:45 GMT

தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களுக்கு 15 - வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மூன்றாம் கட்டமாக ஆந்திரா, ஹிமாச்சலபிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, பஞ்சாப், சிக்கிம், ஆறு வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 195 கோடி நிதி உதவியை மத்திய அரசு விடுத்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக உருவான பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த நிதியை நேற்று விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி வழக்கத்தைவிட முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பை சரி கட்டமாநிலங்களுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Similar News