அரசுக்கு எதிரான தவறான தகவல் நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்.!

அரசுக்கு எதிரான தவறான தகவல் நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்.!

Update: 2020-06-10 04:12 GMT

தமிழகத்தில், கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மிக அதிகமாக, சென்னையில் ஒவ்வொரு நாளும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் பல தளர்வுகளை

தமிழக அரசு அறிவித்துள்ளதும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழக அரசு கண்ணுக்கு தெரியாத நோய் தோற்றோடு போராடி கொண்டிருக்கிறது ஆனாலும் பலர் அரசுக்கு எதிராக வதந்தியை பரப்புவது வருத்தமளிக்கிறது. 

நோய் தொற்று காலத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வது சரியான நடவடிக்கையா என எதிகட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு தேர்வுகளை ரத்து செய்துள்ளது மேலும் பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறினார் 

அரசுக்கு எதிரான தவறான தகவல் பரப்பிய நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Similar News