இந்து பெயரில் போலி முகநூல் கணக்கு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌- வேண்டுமென்றே பல பெண்களை ஏமாற்றிய லவ் ஜிகாத் கொடூரம்.!

இந்து பெயரில் போலி முகநூல் கணக்கு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌- வேண்டுமென்றே பல பெண்களை ஏமாற்றிய லவ் ஜிகாத் கொடூரம்.!

Update: 2020-06-10 11:03 GMT

தினேஷ் ராவத் என்ற இந்து பெயரில் போலி முகநூல் கணக்கு ‌தொடங்கி ஒரு இந்து பெண்ணை ஏமாற்றிய வசீம் அகமத் என்பவன் மேலும் பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஹபூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தந்தை தினேஷ் ராவத் என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வசீம் என்பவன் தனது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்பு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட வசீம் பின்னர் உடல்ரீதியான உறவு கொண்டதாகவும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக இரண்டு வருடங்களாக மிரட்டி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அவனை தினேஷ் ராவத் என்ற பெயரிலேயே அறிந்து இருந்ததாகவும் சில நாட்களுக்கு முன்னர் தான் அவனது உண்மையான பெயர் வசீம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை தனது வலையில் வீழ்த்துவதற்காக போலியான பெயரில் முகநூல் கணக்கு தொடங்கியதையும் அறிந்துகொண்டார். தற்போது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் பொதுவெளியில் வெளியீடு அவரை அவமானப்படுத்தி விடுவேன் என்றும் வசீம் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வசீமை கைது செய்து அவனது சோதனையிட்ட காவல்துறையினர் தினேஷ் ராவத் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான ஆதார் அட்டை மற்றும் உண்மையான பெயரான வசீம் அகமத் பெயரில் இருந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றினர். போலி ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி மீரட்டில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வசீம் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அவனது அலைபேசியை கைப்பற்றிய காவல்துறையினர் அதில் அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததையும் அவை அந்தப் பகுதியிலுள்ள பலருக்கு பகிரப்பட்டு இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். போலி முகநூல் கணக்கை பயணம் மேலும் சில பெண்களையும் ஏமாற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் போலீஸார் கைது செய்யச் சென்றபோது தான் பஞ்சாப் கேசரி என்ற இந்தி நாளிதழின் செய்தியாளர் என்றும் தன்னை பிடிக்க வந்த காவல்துறையினரை தன்னால் பணியிடை நீக்கம் செய்ய வைக்க முடியும் என்றும் மிரட்டியுள்ளான்.

பெண்ணை ஏமாற்றியதன் நோக்கம் குறித்து விசாரித்தபோது இந்துப் பெண்களுக்கு பாடம் கற்பிக்கவே இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளான். இவன் தனியாளாக செயல்பட்டானா அல்லது தொடர்ச்சியான லவ் ஜிகாத் சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்டு செயல்படும் கும்பல் இருக்கிறதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அமன் என்ற பெயரில் பஞ்சாபைச் சேர்ந்த இந்து பெண்ணை ஏமாற்றி அவரது நகைகளைப் பிடுங்கிக் கொண்டு குடும்பத்தினர் உதவியுடன் அவரை தலை, கை, கால்களைத் துண்டித்து கொன்ற கொடூரனை ஒரு ஆண்டுக்கு பிறகு மீரட் காவல்துறையினர் தற்போது கண்டுபிடித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News