வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பாட சுமையை குறைக்க மத்திய அரசு பரிசீலனை - மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.!

வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பாட சுமையை குறைக்க மத்திய அரசு பரிசீலனை - மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.!

Update: 2020-06-11 04:08 GMT

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, வரும் கல்வியாண்டில் ( 1920 – 21 ) பாடத்திட்டங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும் கல்வி நிலையங்களை ஜூலை மாதத்துக்கு பிறகு திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதே  சமயம் இந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் வரும் கல்வியாண்டில் வேலை நாட்கள் அதிகரிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. அத்துடன், குறைவான நாட்களில் பாடத்திட்டங்களை எப்படி முடிப்பது என்பது குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், பெற்றோர் ஆசிரியர்களிடம் இருந்து வந்த ஏராளமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் வேலை நேரத்தை குறைப்பது குறித்து மத்தியஅரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும் சூழல் இல்லை என்பதால், மாநிலங்களின் கருத்தைக் கேட்டு, மத்திய அரசு கற்றலுக்கான மாற்று வழியை அறிவிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Similar News