மதுரை மீனாட்சி யார் ? எப்படி உருவானது மதுரை மீனாட்சி ஆலயம் - ஒரு வரலாற்று பார்வை.!

மதுரை மீனாட்சி யார் ? எப்படி உருவானது மதுரை மீனாட்சி ஆலயம் - ஒரு வரலாற்று பார்வை.!

Update: 2020-06-12 02:07 GMT

தென்னிந்திய திராவிட சிற்ப கலையின் உச்சம் மீனாட்சி அம்மன் ஆலயம். பெரும்பாலான தென்பகுதி கோவில்களில் ஆண் கடவுள்களுக்கு தான் பெரும் ஆலயங்கள் எழுப்பட்டிருக்கும். ஆனால் ஒரு பெண் தெய்வத்திற்கு இத்தனை பெரிய ஆலயம் என்பது அம்பாளின் பெருமையை உலகிற்கு பறைசாறுவதாக உள்ளது.

பாண்டியர்களின் சாம்ராஜ்யம் அடுத்த வாரிசுக்காக காத்திருந்த வேளையில் கயலென உதித்த கனல் மீனாட்சி. அவளுக்கு பாண்டிய மன்னன் மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்சி என்று பெயரிட்டான். மேலும் அந்த சின்னஞ்சிறுமி ஒருபோதும் அவள் இமையை இமைத்ததே இல்லை. இன்று மதுரை தூங்கா நகரம் என பெயர் பெற ஏராளமான காரணம் இருந்தாலும் மதுரை தூங்கா நகரம் என அழைக்கப்பட முக்கிய காரணம் நகரை ஆள்கிற மீனாட்சி அவள் தன் இமையை அசைக்காமல் காவல் காக்கிறாள் என்பதினால் தான்.

நகரை அவளை போன்றே எழிலோடும் வீரத்தோடும் ஆட்சி செய்து வந்தாள் மீனாட்சி. நகரில் நடக்கிற பிரச்சனைகளை தீர்ப்பது, நாட்டை செழிப்புடன் காப்பது என அவள் அரசாட்சியில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்திருந்தது. ஆனால் மீனாட்சியின் தந்தையான பாண்டிய மன்னருக்கு இருந்த ஒரே கவலையே மீனாட்சி மணம் முடிக்காமல் இருந்தது தான். தன்னை விட வீரரை மட்டுமே மணப்பேன் என்பது மீனாட்சியின் சூளுரையாக இருந்தது.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது அவர்கள் வேலையில் சிறந்தவராக , வளம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணிய மீனாட்சி, அதற்காக ஒரு பெரும் திட்டமாக கட்டமைக்கப்பட்டதே மீனாட்சி அம்மை கோவில் என்று ஒரு நாட்டாரியல் கதையும் உண்டு. அந்த மாபெரும் ஆலய திருப்பணி மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வேலை பெற்றனர். தங்களின் திறனை உலகிற்கு பறை சாற்றுபவராக திகழ்ந்தனர்.

அச்சமயத்தில் சுந்தரர் என்கிற நபர் படைதிரட்டி மதுரை நகருக்குள் நுழைய முற்படுகிறார் என்ற தகவல் மீனாட்சியை எட்டுகிறது. அவர் யார் எந்த நாட்டை சேர்ந்தவர் என ஏதும் அறியாத போர் களம் சென்றார். சுந்தரரை கண்டார், அவரே சிவனின் மறு ரூபம் என்பதை உணர்ந்தார் தன்னை முழுமையாக அவரிடம் சரண் கொடுத்தார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும், நிறைவுற இருந்த மீனாட்சி திருக்கோயிலுக்குள் சென்றனர். இத்திருக்கோவிலின் கட்டிடக்கலை மீனாட்சியை முதன்மை படுத்தியே அமைக்கப்பட்டிருந்தது. இன்றும் இதனை உணர முடியும்.

மீனாட்சி அம்மை ஒரு இளவரசி என்பதை தாண்டி அவள் சக்தியின் அம்சம். பார்வதியின் மறுரூபம். இலட்சக்கணக்கான மக்கள் இன்று மதுரை மீனாட்சியை தாயகாவே கருதி தரிசிக்கின்றனர்.

மீனாட்சியின் பிறப்பும் வாழ்ந்த காலமும் கணக்கிட முடியாதது என்ற போதும் . தேவாரம் மற்றும் திருமறையில் மீனாட்சி குறித்த குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

மதுரை மீனாட்சி திருக்கோவிலை சில இஸ்லாமியர்கள் சிதைக்கப்பார்த்தனர். குறிப்பாக 1310 கிபியில் மாலிக் காபூர் படையெடுத்தது வந்த போது அதிர்ஷ்டவசமாக மீனாட்சி விக்ரஹம் காக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் "மீனாட்சி திருக்கல்யாணம்" என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் அன்று தரிசனம் செய்கின்றனர்.

மீனாட்சி நம் மண்ணின் கடவுள். கலாச்சாரத்தின் தெய்வம். இப்பூவுலகை காக்க வந்த பொன்மகள். 

Similar News