கொரோனா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறப்பான சிகிச்சை - மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மத்திய அரசு பாராட்டு!

கொரோனா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறப்பான சிகிச்சை - மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மத்திய அரசு பாராட்டு!

Update: 2020-06-12 08:04 GMT

கொரோனா வைரசால் பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கொடுத்ததற்கு மத்திய அரசு பாராட்டி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாள்தோறும் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனாவால் பாதித்த தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதித்த 28 கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் முதல்வர் சங்குமணி தெரிவித்துள்ளார். தற்போது இதுவரை 14 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அதில் ஒரு குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட இல்லை என கூறினார். இதனால் மத்திய சுகாதாரத்துறை லக்சயா திட்டத்தின் பாராட்டு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் கொரோனாவை எதிர்த்து 24 மணி நேரமும் வேலை பார்க்கும் ஊழியர்கள், பரிசோதனை மைய ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் போன்றவர்களுக்கு மூன்று வேளையும் தேவையான உணவை தன்னார்வலர்கள் 75 நாட்கள் தொடர்ந்து கொடுப்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News