சர்ச்சைக்குரிய வரைபடத்துக்கு நேபாளம் பார்லிமென்ட் அளித்த ஒப்புதலுக்கு இந்தியா கடும் கண்டனம் - புரிந்துணர்வு மீறிவிட்டதாக குற்றச்சாட்டு.!

சர்ச்சைக்குரிய வரைபடத்துக்கு நேபாளம் பார்லிமென்ட் அளித்த ஒப்புதலுக்கு இந்தியா கடும் கண்டனம் - புரிந்துணர்வு மீறிவிட்டதாக குற்றச்சாட்டு.!

Update: 2020-06-14 02:23 GMT

உத்தரகண்டில் உள்ள தார்சுலா பகுதியை லிபுலேக் கணவாயுடன் இணைக்கும் 80 கிலோமீட்டர் சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற மாதம் திறந்து வைத்தார்.

இந்த லிபுலேக் பகுதியுடன், காலாபாணி, லிம்பியதுரா பகுதிகளும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வருவதாக நேபாள அரசு கூறுகிறது. ஆனால் இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருவதுடன் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று திடீரென புதிதாகக் கூறும் நேபாள அரசு அதற்கான புதிய வரைபடத்தையும் சென்ற மே மாத இறுதியில் வெளியிட்டது. இதில் உத்தரகாண்ட் மாநில எல்லையில் உள்ள மேற்கண்ட பகுதிகளைக் கொண்ட இந்த வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வராத நேபாளம் தன் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தது. இதன் மீது விவாதம் நேற்று நடந்தது.

பின்னர் பிரதிநிதிகள் சபையில் நடந்த ஒட்டெடுப்பில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 258 பேர் ஆதரவாக ஒட்டளித்தனர். இதையடுத்து மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

மசோதாவுக்கு முக்கிய எதிர்க்கட்சிகளான நேபாள காங்கிரஸ் , நேபாள ராஷ்ட்ரீய ஜனதா கட்சி, ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து மசோதா நிறைவேறியது.

மேலவைக்கு அனுப்பப்படும் இந்த மசோதா அங்கு எளிதில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்குள்ளது. அங்கு நிறைவேறிய பின் அதிபர் ஒப்புதல் பெற்று சட்டமாக நிறைவேறிய பின் மேற்கண்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் நேபாளம் தனது படைகளை கொண்டு வந்து நிறுத்தக் கூடும் .இது இந்தியாவுடனான மோதலுக்கு சீனாவின் தூண்டுதலால் தயாராவாதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய வெளி விவகாரங்கள் துறை செயலர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேபாளத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். " நேபாளம் வரலாற்றுத்தகவல்கள் அல்லது எந்தவித ஆதாரங்களும் இன்றி செயற்கையாக வேண்டுமென்றே தனது எல்லையை விரிவாக்கியுள்ளது. இது ஏற்கமுடியாதது. இந்த எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வை இது மீறிய செயலாகும் என கூறியுள்ளார்.   

Similar News