புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் போராட்டம் - கொரோனா தடுப்பு பணிகள் பாதிப்பு.!

புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் போராட்டம் - கொரோனா தடுப்பு பணிகள் பாதிப்பு.!

Update: 2020-06-15 12:47 GMT

புதுச்சேரி நகராட்சியில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கால்வாய்கள் தூர் வாருதல், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல், கொரோனா தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த மே மாத ஊதியம் இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.


இந்நிலையில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்காததை கண்டித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதியத்தை வழங்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். 

Similar News