பள்ளிக் கல்வி துறை அதிரடி மாணவர் சேர்க்கை கூடவே கூடாது - அமைச்சர் கண்டிப்பு.!

பள்ளிக் கல்வி துறை அதிரடி மாணவர் சேர்க்கை கூடவே கூடாது - அமைச்சர் கண்டிப்பு.!

Update: 2020-06-16 03:31 GMT

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்ததில் இருந்து சில தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் பரவியதையடுத்து. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை  சம்பந்தமான எந்த விதமான நடவடிக்கையும் கூடாது என கூறியுள்ளது.

சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் பழனிசாமியும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார். தமிழகம் முழுவதும் சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் கிடைத்து. இன்று பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான தொடர்பான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News