மலிவான அரசியலால் தடயமின்றி அழியபோகும் தி.மு.க. - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளாசல்.!

மலிவான அரசியலால் தடயமின்றி அழியபோகும் தி.மு.க. - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளாசல்.!

Update: 2020-06-17 02:24 GMT

கொரோனோ விவகாரத்திலும் திமுக அரசியல் செய்து மக்களை குழப்பி வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "கொரோனோ தொற்றினால் ஏற்படும் மரண சதவீதத்தை உலகிலேயே குறைவான சதவீதத்தில் நிறுத்தியதிலும், இந்தியாவிலேயே நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பரிசோதனைகள் நடத்துவதிலும் அதற்க்கான கொரோனோ பரிசோதனை கூடங்களை இந்தியாவிலேயே அதிகளவில் அமைத்ததிலும் வழிகாட்டியாக செயல்படும், உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.

அதேவேளையில், மக்களையும், அதற்க்காக பாடுபடும் அரசு ஊழியர்களையும் மனச்சோர்வு அடையச்செய்யும் வகையிலும், அச்சத்தையும், பீதியையும் ஏற்ப்படுத்தும் நோக்கத்திலும் எதிர்க்கட்சியான திமுக அதர்மத்தின் வழியில் அலசியல் செய்து அக்கிரமம் புரிந்து வருகிறது.

அபவாதம் செய்து 'ஒன்றிணைவோம் வா' என அரசுக்கு எதிராக தன் கட்சியினரை தூண்டி விட்டு ஸ்டாலின் நடத்திய அத்துமீறல்களால் தான்அவருடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ அன்பழகனையே பலிகொடுக்க வேண்டிய பரிதாப சூழல் நிகழ்ந்தது, இன்னும் பலருக்கு கொரோனோ பரவிட காரணமாகவும் ஆகிவிட்டது".

மேலும், "இதுபோன்ற மலிவான அரசியல் திமுக'வை தடயமின்றி அழிக்கப்போகிறது என்பது நிச்சயம்.

இதற்கு திமுக'வில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் மூத்த நிர்வாகிகளே சாட்சி. எனவே இனியாவது ஸ்டாலின் நரித்தனம் செய்வதையும், பீகார்காரர் கொடுக்கும் பினாமி அறிக்கைகள் விடுவதையும் நிறுத்தி குறைந்தபட்சம் கொரோனோ காலம் வரையிலாவது அரசியல் ரீதியாக தன்னை தனிமைபடுத்திக் கொள்வதே மக்களுக்கு அவர் செய்யும் நல்லதாகும்"என கூறினார்

Similar News