ஆற்றில் மணல் அள்ளும் போது வெளிப்பட்ட பழமையான சிவன் கோவில் - ஆந்திராவில் நடந்த அதிசயம்.!

ஆற்றில் மணல் அள்ளும் போது வெளிப்பட்ட பழமையான சிவன் கோவில் - ஆந்திராவில் நடந்த அதிசயம்.!

Update: 2020-06-17 09:55 GMT

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பெருமல்ல‌ பாடு என்ற ஊரில் பெண்ணாற்றில் மணல் அள்ளும் போது பழமையான சிவன் கோவில் வெளிப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சேஜெர்லா அருகே பெருமல்லபாடு என்ற ஊரில் பெண்ணாற்றில் மணலில் புதைந்த பழமையான நாகேஸ்வர ஸ்வாமி கோயில் மணல் அள்ளும் போது வெளிப்பட்டது. கோவில் கோபுரத்தைக் கண்ட‌ கிராமத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் இந்தியா முழுவதும் கட்டப்பட்ட 101 க்ஷேத்திரங்களில் இதுவும்‌ ஒன்று என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பெண்ணையாற்றகன் போக்கு காலப்போக்கில் திசை மாறியதாலும் 1850ல் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகும் கோவில் மணல் மேடுகளால் மூடப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோபுரம், கர்ப்பகிரகம் ‌மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை வெளிவந்த நிலையில் கோவில் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு சுத்தம் செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உள்ளூர் வாசிகளின் விருப்பப்படி கோவில் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News