தயார்‌ நிலையில் இராணுவம் - தளவாடங்களை கொள்முதல் செய்து கையிருப்பை அதிகரிக்கவும் உத்தரவு.!

தயார்‌ நிலையில் இராணுவம் - தளவாடங்களை கொள்முதல் செய்து கையிருப்பை அதிகரிக்கவும் உத்தரவு.!

Update: 2020-06-18 06:05 GMT

கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த சீனாவின் எதிர்பாராத வன்முறையால் எச்சரிக்கை அடைந்துள்ள இந்திய அரசு இனி இப்படி ஒரு வாய்ப்பை சீனாவுக்கு கொடுத்து விடக் கூடாது என்று போர்த் தளவாடங்களை தேவையான அளவு கையிருப்பு வைக்குமாறு‌ இராணுவத்திற்கூ உத்தரவிட்டுள்ளது. இருபக்கமும் பதற்றத்தைக் குறைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும் போர் வரும் சூழல் ஏற்பட்டால் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உயர்‌மட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் விரும்புவதாக எகானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படையும் மலாக்கா ஜலசந்திக்கு அருகிலும் பிற இந்திய-பசிபிக் கடற்பகுதிகளிலும் சீனாவை எதிர்க்கக் தேவைப்படும் அளவு படைகளை நிறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவ தளவாட தேவைகளைப் பொறுத்து மூன்று படைத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து எது முக்கியமானது என்று முடிவு செய்யும் பொறுப்பு பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத்திடம் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய விமானப்படையும் போர் விமானங்களையும் பிற முக்கிய போர்‌ தளவாடங்களையும் முக்கியமான இடங்களில் நிலைநிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று கார்ப்ஸ் கமாண்டர் அளவில் பேச்சு வார்த்தை நடத்த‌ வேண்டும் ‌என்று சீனா கேட்டுக் கொண்டதாகவும், கல்வான்‌ பகுதியிலிருந்து சீன இராணுவம்‌ முழுதாக பின் வாங்கும் வரை உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் எகானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய இராணுவம் ரோந்து செல்லும் PP 14 பகுதியில் சீன வீரர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்களை நீக்குவது தொடர்பான பேச்சு வார்த்தையின் போது இந்திய தரப்பின் கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொண்ட சீன ராணுவம் கூடாரங்களை கலைக்காமல் சிறிது தூரம் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறு பல முறை நடந்துள்ளதுடன் அதிக உயரத்தில் இருக்கும் இப்பகுதிகளில் இப்படி கூடாரங்களை விட்டுச் செல்வது பின்னர் வந்து ஆக்கிரமிக்க ஏதுவாகிவிடும் என்றும் இந்திய ராணுவம்‌ எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்தே கூடாரங்களைப் பிரிக்க இந்திய வீரர்கள் சென்ற போது சீன இராணுவ வீரர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

படைகளைப் பின்வாங்கச் செய்ய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இத்தகைய முறையற்ற செயலில் சீன இராணுவம் ஈடுபட்டதாலும், மேலும் கல்வான் பிரச்சினைக்கு முழுதாக தீர்வு காணப்படுவதற்கு முன்பே பங்கொங் ட்ஸோ(Pangong Two) பகுதியைப் பற்றி பேசுவதிலேயே ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் சீனாவின் திடீர்த் தாக்குதலை இந்த முறை வீரர்கள் திறமையாக எதிர் கொண்ட போதும் இன்னொரு முறை இப்படி நடந்தால் இந்தியா பின்னடைவைச் சந்திக்கும் நிலை வந்துவிடக்கூடாது என்று முப்படைகளுக்கும் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News