சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!

சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!

Update: 2020-06-19 04:18 GMT

இந்திய - சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில் சீனா நாட்டின் பொருட்களை வாங்க வேண்டாம் என உணவு மற்றும் நுகர்வோர் துறை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் முன்பும் மற்றும் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தற்போது மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சீன நாட்டின் பொருட்களை இந்திய மக்கள் வாங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை பற்றி அமைச்சர் நேற்று கூறியது: இந்திய மக்கள் அனைவரும் சீனா நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களை வாங்க வேண்டாம். சீன நாட்டின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும். தற்போது சைனீஸ் உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர் அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சீன நாட்டின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சீன நாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு மத்திய அரசு பிஐஎஸ் தர விதிகளை விதித்துள்ளது. மேலும், நம் இந்தியாவில் இருந்து தரமான மற்றும் சிறப்பான பொருட்களை சீனாவிற்கு அனுப்புகின்றோம். ஆனால், அதனை பரிசோதித்து பொருட்கள் தரமாக இல்லை என சீனா நாடு குற்றம் சாட்டுகிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். 

Similar News