சமூக நீதியும் மறுக்கப்படவில்லை; அநீதியும் இழைக்கப்படவில்லை - ரயில்வே துறைத்தேர்வு பற்றிய உண்மைகள்!
சமூக நீதியும் மறுக்கப்படவில்லை; அநீதியும் இழைக்கப்படவில்லை - ரயில்வே துறைத்தேர்வு பற்றிய உண்மைகள்!
மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்ட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிப் போயிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஆலோசகர்கள் தான் சரியில்லையா, இல்லை அவர்கள் சொல்லும் சரியான ஆலோசனைகளை இவர்தான் கேட்பதில்லையா என்று புரியவில்லை. அடிக்கடி தவறான விஷயங்களில் தலையிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.
தற்போது தென்னக ரயில்வே நடத்திய கூட்ஸ் கார்டுகளுக்கான தேர்வில் வெறும் 5 தமிழர்கள் தான் தேர்வடைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 'தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்பதற்கு இது மற்றுமொரு சான்று' என்று பதிவிட்டுள்ள அவர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் 'ஆட்சேர்ப்பு முறையை மறு ஆய்வு செய்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தென்னக ரயில்வே கீழ்நிலை பணியாளர்களை, இதில் பலர் பொறியியல் பட்டதாரிகள், கூட்ஸ் ரயில் கார்டுகளாக பணி உயர்வு அளித்து நியமிக்க துறைத் தேர்வு நடத்தியது. இத்தேர்வு கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருக்கும் 96 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3000 பேரையும் சேர்த்து மொத்தம் தேர்வெழுதிய 5,000 பேரில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்சியடைந்துள்ளனர். எஞ்சிய இடங்களுக்கு வட இந்திய பணியாளர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் 96 பேரில் எத்தனை பேர் சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், பொது இட ஒதுக்கீட்டு முறையை தென்னக ரயில்வே பின்பற்றியுள்ளதா என்று பார்த்திருக்க வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி ஸ்டாலின் குறை கூறவில்லை என்பது தென்னக ரயில்வே இட ஒதுக்கீடு கொள்கைக்கு புறம்பாக நடந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. உண்மையிலேயே சமூக நீதி மறுக்கப்பட்டு இருந்தால் தென்னக ரயில்வேயில் இருக்கும் அதிகாரம் மிக்க ஊழியர் சங்கங்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும். எனவே சமூக நீதி மறுக்கப்பட்டது எனும் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.