கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 - ஆந்திர முதல்வர் அறிவிப்பு.!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 - ஆந்திர முதல்வர் அறிவிப்பு.!
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு ரூபாய். 15 ஆயிரம் கொடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவுவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதைப்பற்றி மறு ஆய்வு கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். மேலும், ஆந்திராவில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 365 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 16,464 குணமடைந்துள்ளனர்.