சமூக ஊடகங்களில் சீன அரசை விளாசும் சீன மக்கள் - இந்தியாவைப் போல் வெளிப்படைத் தன்மை வேண்டும் என ஆவேசம்!
சமூக ஊடகங்களில் சீன அரசை விளாசும் சீன மக்கள் - இந்தியாவைப் போல் வெளிப்படைத் தன்மை வேண்டும் என ஆவேசம்!
கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் நடந்த மோதலின் போது சீன படையினரில் எத்தனை பேர் மரணமடைந்தனர் என்ற உண்மையை சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது. சீனாவின் சமூக ஊடகங்களில் பலர் இதைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா டுடேயில் வந்த செய்திகளின் படி, வெய்போ எனும் சமூகவலை தளத்தில் சீன தணிக்கை குறித்த கேள்விகளை எழுப்பினர், அதே நேரத்தில் சீன ராணுவம் அனுபவித்த மொத்த உயிரிழப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மையை கோரி வருகின்றனர்.
இந்தியா டுடே, அவற்றில் சிலவற்றை சீன மொழியில் இருந்து மொழி பெயர்த்துள்ளது. அவற்றில் ஒன்று ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை காட்டுவது என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
மற்றொன்று "இது இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது. நம்மைப் பற்றி என்ன? நாம் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டு நமது வீரர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். இறந்த வீரர்களுக்கான நினைவு நிகழ்ச்சிகளை நாம் ஏன் வெளிப்படையாக நடத்தக்கூடாது?" என்று கூறுகிறது.
மற்றொரு செய்தி இதேபோல் இந்தியா நடத்திய நினைவு நிகழ்ச்சிகளைப் பாராட்டி, இது இந்தியா அவர்கள் ராணுவ வீரர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுகிறது என்று புகழ்கிறது.
மற்றும் சிலர் எத்தனை பேர் மரணம் என்று அறிவிக்கப்படாததால் ராணுவ வீரர்களின் நலன் குறித்து கவலை தெரிவித்தனர். சீனப் படையினரின் குடும்பங்கள் அவர்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவார்கள் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
சிலர் சீன அரசாங்கத்தை நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர், சீனா, குடிமக்கள் கருத்துக்களை அடக்கினால் தேசத்திற்காக தங்கள் உயிரை ஏன் தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.