முகத்தில் குத்து வாங்கிய சீன வீரர்கள் - கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி துவம்சம் செய்த இந்திய சிங்கங்கள்.!

முகத்தில் குத்து வாங்கிய சீன வீரர்கள் - கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி துவம்சம் செய்த இந்திய சிங்கங்கள்.!

Update: 2020-06-25 01:18 GMT

லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்திய சீன வீரர்கள் மோதிக் கொள்ளும் காணொலிக் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

எல்லையில் அத்துமீறிய சீன வீரர்களை இந்திய வீரர்கள் கேலி செய்தும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ‌கைகளால் தாக்கிக் கொள்ளும் காணொளி‌ வெளியாகியுள்ளது.

இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இந்த காணொளி வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்த மாதம் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்திய சீன எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள 22,000 அடி உயர ‌சோமோ யும்மோ மலையடிவாரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த காணொளி என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை போன்று அல்லாமல் இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் திபெத்துக்கு இடையில் அமைந்துள்ள இந்த எல்லை வரையறுக்கப்பட்ட எல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த காணொளியின் தொடக்கத்தில் முகக் கவசம் அணிந்த இருதரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றனர். பின்னர் பேச்சு வார்த்தை முற்றி கைகலப்பாகி இரு தரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொள்கின்றனர். சில நிமிடங்களுக்கு அமைதி திரும்பிய போதும் மீண்டும் வீரர்கள் முகத்தில் குத்தி மோதலில் ஈடுபடுகின்றனர்.

காணொளியின் ஒரு பகுதியில் நகைச்சுவை உணர்வு மிக்க இந்தியத் துருப்புக்கள் "இவன் மூஞ்சியைப் பார்! உனக்கு பானி பூரி வேணுமா?" என்று சீன வீரர்களை கேலி செய்கிறார்கள். மேலும் சீன வீரர்கள் அவ்வளவு உயரத்தில் பனி படர்ந்த சிகரத்தில் மூச்சு விடத் திணறுவது போல் தெரிவதாக காணொளியை பகிர்ந்துள்ள பத்திரிகையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த மோதல் நடந்த பகுதி கடந்த மே 9 அன்று இதே போல் இருதரப்பு ராணுவ வீரர்களும் இதைவிட வன்முறையான மோதலில் ஈடுபட்ட பகுதியில் இருந்து 6கிமீ தூரமே இருக்கும் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த காணொளியாக வெளியான மோதலில் 20-30 வீரர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் மே 9 அன்று நடந்த மோதலில் 150 வீரர்கள் ஈடுபட்டதாகவும் இருதரப்பினரும் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது. இந்த மோதல் லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பங்கங் சோ ஏரி பகுதியில் இரு துருப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புக்கு பின்னால் நடந்ததாக கூறப்படுகிறது.

Similar News