இந்திய விண்வெளி உள்கட்டமைப்பைப் பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு - மத்திய அரசின் முடிவிற்கு இஸ்ரோ தலைவர் கே. சிவன் பாராட்டு.!
இந்திய விண்வெளி உள்கட்டமைப்பைப் பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு - மத்திய அரசின் முடிவிற்கு இஸ்ரோ தலைவர் கே. சிவன் பாராட்டு.!
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புதன்கிழமை அன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய விண்வெளி உள்கட்டமைப்பைப் பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதற்காக , 'இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe)' அமைக்க முடிவு செய்துள்ளது. இம்முடிவு அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த முடிவை இன்று வரவேற்றுள்ள இஸ்ரோ தலைவர் கே.சிவன், விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறக்க மத்திய அரசு எடுத்த முடிவு, இந்தியாவை ஒரு புதிய தளத்தில் சேர்க்கும் என்று கூறியுள்ளார்.
"மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளில் இந்தியா ஒன்றாகத் திகழ்கிறது. இதனால் விண்வெளித் துறை, இந்தியாவின் தொழில்துறை தளத்தை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும். தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறையைத் திறப்பதன் மூலம் இஸ்ரோவின் சாதனைகளைப் பயன்படுத்துவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது, "என்று அவர் மேலும் கூறினார்.
மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஜூன் 24) இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) அமைப்பதற்கான தனது முடிவை அறிவித்தது என்பதையும், கிரக ஆய்வு பணிகள் உட்பட முழு அளவிலான விண்வெளி நடவடிக்கைகளிலும் தனியார் துறையின் பங்களிப்பை அங்கீகரித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். .
இந்திய விண்வெளித் துறை அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், தற்போதுள்ள அமைப்பிற்கு எதிரான ஒரு புகார் என்னவென்றால், திறன் இருந்தபோதிலும் தனியார் துறையை நாம் உள்நுழைய அனுமதிக்கவில்லை என்பதாகும் என்றும் அதை நிவர்த்தி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) விண்வெளி நடவடிக்கைகளை ஒரு 'சப்ளை டிரைவன்' மாடலில் இருந்து 'டிமாண்ட் டிரைவன்' மாடலுக்கு மறு-திசை திருப்ப முயற்சிக்கும், இதன் மூலம் நாட்டின் விண்வெளி சொத்துக்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.