டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா - மருத்துவமனை மூடி சீல்.!

டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா - மருத்துவமனை மூடி சீல்.!

Update: 2020-06-27 11:47 GMT

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் நிர்வாகத்தை அவருடைய மனைவி கவனித்து வருகிறார்.


தற்போது டாக்டர் கிருஷ்ணசுவாமியின் மனைவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய சங்கீதா மருத்துவமனையை சுகாதாரத்துறை மூடி சீல் வைத்தன மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பாதை மூடப்பபட்டுள்ளது.


டாக்டர் கிருஷ்ணசுவாமியின் வீட்டை தனிமைப்படுத்தப்பட்டு வீட்டின் முன்பு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் ஓட்டினார். மேலும், நாளை டாக்டர் கிருஷ்ணசுவாமி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு கூரான வைஸ் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 

Similar News