ஆண்களையும் குறி வைக்கும் லவ் ஜிகாத் - மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளாத கணவன், சீரழியும் கலாச்சாரம்.!
ஆண்களையும் குறி வைக்கும் லவ் ஜிகாத் - மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளாத கணவன், சீரழியும் கலாச்சாரம்.!
இந்து பெண்களை குறிவைத்து அணுகி, சில சமயம் உண்மையான பெயரிலும் சில சமயம் போலியான இந்து பெயரைக் கூறியும் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, பின்னர் அதைப் பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களைக் காட்டி அச்சுறுத்தி கட்டாய மதமாற்றம் செய்து இரண்டாவது, மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டோ அல்லது பாலியல் அடிமையாகவோ வைத்திருக்கும் முஸ்லிம்களின் லவ் ஜிகாத் எனும் கலாச்சார சீரழிவு வட இந்தியாவில் மட்டுமே அதிகம் நடந்து வருவதாக நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்காலத்தை படம்பிடித்துக் காட்டும் விதமாக திருச்சியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ஆனால் திருச்சியில் நடந்த சம்பவத்தில் ஒரு இந்து ஆணை மூளைச்சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த போதும் என்னவென்று கேட்காத அளவிற்கு சுபாவத்தையே மாறறி வைத்துள்ள கொடுமை நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் முகமது பாரூக் என்பவரும் கல்லூரிக் காலம் முதல் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
தினேஷ் பர்வீன் என்ற ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் மத போதனை செய்து 2005ம் ஆண்டு தினேஷையும் அவரது தங்கையையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியுள்ளார். முகமது அஸ்லாமாக மாறிய தினேஷீக்கு அவர் விரும்பிய பெண்ணைத் திருமணமும் செய்து வைத்துள்ளார். மத போதனைகளின் போது, தான் ஒரு இறைத்தூதர் என பாரூக் அஸ்லாமை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. அஸ்லாம் அவரது மனைவியையும் மதபோதகர் பாரூக்கை வணங்குமாறு கூறியுள்ளார். இதைப் பயன்படுத்தி அடிக்கடி அஸ்லாம் வீட்டிற்கு சென்று புனித நீர் தெளித்து சடங்குகளைச் செய்துள்ளார். ஒரு முறை புனித நீர் என்று கூறி மயக்க மருந்து கலந்து நீரைக் கொடுத்து அஸ்லாமின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் அதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி மிரட்டி ஒன்பது வருடங்களாக துன்புறுத்தி வந்துள்ளார்.