கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம்- இந்து முன்னணி.!
கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம்- இந்து முன்னணி.!
கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வழிபாடு சார்ந்த விஷயங்களுக்கு குறிப்பாக கோவில்களைத் திறப்பது உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவிட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் பீதியில் , மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான். இதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அதற்கு காரணம் கோவில்கள் தமிழகத்தில் திறக்கப்படாததுதான் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கோவில்கள் திறந்திருந்த பல மாநிலகளில் இன்று கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் முழு முதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் வழிபாடு எத்தகைய கடும் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்துக்கள் அனைவரது வீட்டிலும் இது கொண்டாடப் படும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.
ஆகவே தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.