சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169- வது பட அப்டேட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169- வது பட அப்டேட்.!

Update: 2020-07-04 10:21 GMT

ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம்.

இதர்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு கதையை சொல்லியிருக்கிறார். அந்தக்கதையில் ரஜினிக்கு முழுத் திருப்தி இல்லை. வியாபார அம்சங்களோடு கலந்த மாஸ் படம் நடிக்கவேண்டும் என்கிற ரஜினியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற கதையாக இல்லை.

அதன்பின் ரஜினியின் விருப்பங்களை, சவுந்தர்யா ரஜினி மூலம் தெரிந்துக்கொண்டார். லோகேஷ்கனகராஜ், கதையில் பல மாற்றங்களைச் செய்து மீண்டும் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.

மீண்டும் ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் கதை கூறியிருக்கிறார் இக்கதையில் அவருக்கு முழுமையாக திருப்தி அடைந்து விட்டார். ரஜினியின் 169 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் அப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதும் உறுதியாகிவிட்டதாம்.

இது குறித்து தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்து ரஜினி கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

Similar News