மூன்று ஆண்டுகளில் 17 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு - மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் மூன்று ஆண்டுகளில் 17 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-03-22 13:30 GMT

மத்திய கனரக தொழில் துறை இணை மந்திரி கிரிஷன்பால் குட் ஜால் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளதாவது:- கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இம்மாதம் 15ஆம் தேதி வரை இந்தியாவில் 17 லட்சத்தி 23 ஆயிரத்து 744 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 92 வாகனங்களும், 2021 ஆம் ஆண்டு மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 976 மின்சார வாகனங்களும், 2022 ஆம் ஆண்டு 10 லட்சத்து 15 ஆயிரத்து 196 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன .


இந்த ஆண்டு, 86 ஆயிரத்து 950 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அது கூறியுள்ளார். மேலும் அந்த பதிலில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கனக தொழில் துறை சார்பில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மூன்று திட்டங்கள் ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 


Similar News