1991 பட்ஜெட்டில், ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்க முயன்ற மன்மோகன் சிங்.! #RajivGandhiFoundationScam

1991 பட்ஜெட்டில், ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்க முயன்ற மன்மோகன் சிங்.! #RajivGandhiFoundationScam

Update: 2020-06-26 08:44 GMT

காந்தி குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளின் நீண்ட பட்டியல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உடனான காங்கிரஸ் கட்சியின் தொடர்புகள் தோன்றிய ஓரிரு நாட்களில் சீன அரசாங்கத்திடமிருந்து பெரும் பண பலன்களைப் பெறும் விஷயம் வெளியாகி அரசியல் புயலை உருவாக்கியது.

இப்போது, ​​மற்றொரு அதிர்ச்சிக்குரிய விவகாரம் வெளிவந்துள்ளது.

ஒரு ட்வீட்டில், வழக்கறிஞர் ஷாஜாத் பூனவல்லா 1991-92ல் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தபோது, ​​மன்மோகன் சிங், மத்திய பட்ஜெட்டில் இருந்து சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ .100 கோடி ஒதுக்க முயன்றதாக பகிர்ந்துள்ளார். அது எதிர்க்கட்சிகளினால் ஏற்பட்ட பெரிய சலசலப்புக்குப் பிறகுதான் நிறுத்தப்பட்டது எனவும் குறிப்பிடுகிறார். 



1991-92ல் இந்திய பாராளுமன்றத்தின் மத்திய பட்ஜெட் விவாதத்தின் ஒரு பகுதியில், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு 5 ஆண்டு காலப்பகுதியில் ரூ .100 கோடி நன்கொடை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொகை "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்க்கவும், கல்வியறிவு பரப்புதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், வகுப்புவாத நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு, சலுகை குறைந்தவர்களின் மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் செயல் திட்டங்களுக்கு நிதியளிப்பதாகும்' என விளக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் தயாரித்த 1991-92 ஆம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டில் மற்றொரு ஏற்பாடும் இருந்தது. 100 கோடி போதுமானதாக இல்லாவிட்டால் மேலும் 250 கோடி ரூபாயை ஒதுக்கி வைக்க மத்திய பட்ஜெட்டில் இடம் இருந்தது. பட்ஜெட் ஆவணத்தின் 58 வது பிரிவு, "இந்த ஒவ்வொரு புதிய முயற்சிகளுக்கும் தேவையான சரியான தொகை எவ்வளவு என நிர்ணயிப்பது நிலுவையில் உள்ளது, நிதி அமைச்சகத்தின் திட்ட செலவில் ரூ250 கோடி மொத்த தொகை சேர்க்கப்பட்டுள்ளது." 


Union Budget (91-92)

காந்தி குடும்பத்தின் தலைமையிலான ஒரு அறக்கட்டளைக்கு காங்கிரஸ் நடத்தும் அரசாங்கம் எவ்வாறு நிதி ஒதுக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மன்மோகன் சிங் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அனுப்பிய ஒரு கடிதத்தைப் படித்தார், அதில் அறக்கட்டளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தாராளமான தொகையைப் பாராட்டுகிறது என்றும் ஆனால் அந்த நிதியை அரசாங்கமே பொருத்தமான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அது கருதுவதாகவும் குறிப்பிடுகிறது. (அதாவது, கடும் எதிர்ப்புக்கு பிறகு,

தாங்களாவே முன்வந்து பெருந்தன்மையாக மறுப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க)

இதைக் குறித்து ஜனதா தள MP சந்திர ஜீத் யாதவ், நிதி அமைச்சர் (மன்மோகன்) பட்ஜெட்டை மிகவும் அலட்சியமாக கையாள்கிறார் என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது, "நாம் நாட்டின் பட்ஜெட்டைப் பற்றி விவாதித்து வருகிறோம், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு பிறகு அதை திரும்பப் பெறுவதற்கு அரசாங்கம் இந்த வகையான மிகவும் அலட்சியமான அணுகுமுறையை எடுக்க முடியாது. இதிலிருந்து, பட்ஜெட்டின் மாஸ்டர் ராஜிவ் காந்தி அறக்கட்டளை என்பது போல் தோன்றுகிறது. அறக்கட்டளையிலிருந்து ஒரு கடிதம் வந்தவுடன் நிதியமைச்சர் சபைக்கு முன் வந்து அதை வாசிக்கிறார். அவர் அமைச்சரவை சார்பில் பேசுகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும், இது குறித்து விவாதிக்க அரசுக்கு வாய்ப்பு கிடைத்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இந்த நாட்டின் நிதி விவகாரங்களை வழிநடத்தும் நாடாளுமன்றத்தை கையாள்வதற்கான வழி இதுவல்ல."என்று விளாசித் தள்ளினார். 



நாட்டின் நிதியமைச்சராக அமைச்சரவை சார்பாக மன்மோகன் சிங் பேசுகிறாரா அல்லது அவர் காங்கிரஸ் ராஜ குடும்பத்தின் சார்பாக அவர் பேசுகிறாரா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு யாதவ் சென்றிருந்தார்.

காங்கிரஸ் கட்சிக்கும் சீன அரசுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனத் தூதரகத்திலிருந்து மட்டுமல்லாமல், சீன அரசாங்கத்திடமிருந்தும் 2005 மற்றும் 2009 க்கு இடையில் ஒரு முறை அல்ல, குறைந்தது மூன்று முறை ஒரு கோடிக்கும் மேல் நன்கொடைகளைப் பெற்றதாக நேற்று தகவல்கள் வெளிவந்தன.

சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் வருடாந்திர அறிக்கைகளில் சீன அரசிடமிருந்து பண நன்கொடை பெறுவது மட்டுமே சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா, மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் ஆகியோர் அறங்காவலர்களாக கொண்டுள்ள ராஜிவ் காந்தி அறக்கட்டளை, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஒரு முறை அல்ல, பல முறை நன்கொடைகளைப் பெற்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அதன் ஆண்டு அறிக்கைகளிலேயே உள்ளது. 2005-2006 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நன்கொடை பெற்றதாக ஆண்டு அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதே வெளிப்பாடு 2006-2007, 2007-2008 அறிக்கையிலும் செய்யப்பட்டுள்ளது.அத்தகைய நன்கொடையின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், உண்மையில் ஒரு நன்கொடை வழங்கப்பட்டது என்பது ஒரு உண்மை. 

References: https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses1/14020891.htm

Similar News