இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உதவி.!

இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உதவி.!

Update: 2020-08-06 12:04 GMT

நடிகர் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996-ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சூப்பர் ஹிட்டான படத்தை இயக்குனர் ஷங்கர் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் சித்தார்த், காஜல்அகர்வால், ரகுல் பிரீத் சிங்,நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா ஆகியோர் பலர் நடித்து வந்தனர். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சண்டை கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர் மட்டும் பணியில் இருந்தனர்.

இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களின் மூலம் மின் விளக்கு பொருத்தப்பட்ட இருந்தது. அப்பொழுது திடீரென கிரேன் அவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். ஆனால் அங்கு உதவி இயக்குனராக இருந்த ஆர்ட் அசிஸ்டென்ட்,புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கொடுமையான விபத்து என்று குறிப்பிட்டிருந்தார். உயிரிழந்த குடும்பத்திற்கு இயக்குனர் ஷங்கரும் நடிகர் கமலஹாசனும் 1 கோடி அவர்களது குடும்பத்திற்கு தனித்தனியாக கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்பின் லைக்கா நிறுவனமும் இவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் என்று அறிவித்திருக்கிறது.

Similar News