எல்லையில் வீரமரணம் அடைந்த 20 வீரர்கள் யார் யார்? பட்டியலை வெளியிட்டது இராணுவம்.!
எல்லையில் வீரமரணம் அடைந்த 20 வீரர்கள் யார் யார்? பட்டியலை வெளியிட்டது இராணுவம்.!
லடாக்கில் கல்வான் பகுதியில் சீன வீரர்களால் நிகழ்ந்த அத்துமீறிய மோதலால் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி பெயர் உட்பட சட்னம் சிங், மன்தீப் சிங், குந்தன் குமார், அமன் குமார்,தீபக் சிங்,சந்தன் குமார்,கணேஷ் ஹஸ்தா,கணேஷ் ராம், கே.கே.ஓஜா,ராஜேஷ் ஓரோன்,கர்னல் சந்தோஷ்பாபு, பிரதான், ராம்சோரன், சுனில்குமார், ஜெய் கிஷோர் சிங், பிபுல்ராய், குர்தேஜ் சிங்,அங்குஷ், குர்வீந்தர் சிங், ஆகியோர் பெயர்களை இராணுவம் இன்று வெளியிட்டது.
வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல் லடாக்கின் லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முன்னர், ராணுவத்தினர் இறுதி மரியாதை அளித்தனர்