கடந்ந ஒரு வாரத்தில் 20 முறை எல்லை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.! #Pak #IndiavsPak #Kashmir
கடந்ந ஒரு வாரத்தில் 20 முறை எல்லை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.! #Pak #IndiavsPak #Kashmir
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியான தேக்வார், குவாஸ்பா ஆகிய இடங்களில் நேற்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிமை முதல் தொடர்ந்து 8'வது நாளாக இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் காஷ்மீர் பூஞ்ச், கதுவா, ரஜோரி மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20'க்கும் அதிகமான அத்துமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.