கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடையிலான இடைவெளி 2,06,588ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடையிலான இடைவெளி 2,06,588ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்!

Update: 2020-07-09 14:39 GMT

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை இருந்த போதிலும் கொரோனா வைரஸ் நெருக்கடியை இந்தியா ஒப்பீட்டளவில் மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

தற்போது கொரோனா மீட்பு வீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோயாளிகளிடையே மீட்பு விகிதம் இன்று 62.09% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது, 2,69,789பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு குனமடைந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட  1.75 மடங்கு அதிகமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், குனமடைந்தவர்களுக்கும் இடையிலான இடைவெளி 2 லட்சத்தை கடக்கிறது. அது தற்போது 2,06,588 ஆக உள்ளது.



Similar News