"கார்கில்" போரின் 21ஆவது வெற்றி நினைவு நாள் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை...!!!

"கார்கில்" போரின் 21ஆவது வெற்றி நினைவு நாள் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை...!!!

Update: 2020-07-26 08:02 GMT

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை வெற்றி கொண்டு கார்கிலில் மீண்டும் இந்திய கொடியை நாட்டிய இந்திய ராணுத்தை போற்றும் கார்கில் 21- வெற்றி தினம் இன்று.

1999ம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பு வகித்தவர் நவாஸ் ஷெரீப். இவரது ஒப்புதல் இன்றி, அந்நாட்டு ராணுவத் தளபதி பர்வேஷ் முஷரப் ரகசியத் திட்டமிடலில் ஈடுபட்டார். அதன்படி, பாகிஸ்தானிய படைகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோர் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். ஊடுருவிய படைகள் முக்கிய இடங்களைத் தன் Iகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பின்னர் இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் படைகளால் சமாளிக்க முடியாத அளவிற்கு, தாக்குதல் கடுமையாக இருந்தது. ஜூலை இறுதிவாக்கில் அனைத்து ஆக்கிரமிப்பு நிலைகளிலும் பாகிஸ்தான் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதையடுத்து ஜூலை 26, 1999ல் இந்திய ராணுவ கார்கில் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல் இந்நாள் 'விஜய் திவாஸ்' என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

இன்று 21 ஆண்டுகள் கார்கில் வெற்றி விழாவை கொண்டாட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வெற்றியை உலகம் எப்பொழுதும் அழகாக இது இந்தியர்களுக்கான வெற்றி என்று பெருமையுடன் கூறுகிறார். இந்நாளில் நாட்டுக்காக உயிர் கொடுத்தவர்களுக்கு வீரவணக்கத்தை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் "எங்கள் ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியமும் தேசபக்தியும் இந்தியா பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

Similar News