ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் : 26 ஜூன் 2020 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்.!

ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் : 26 ஜூன் 2020 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்.!

Update: 2020-06-25 12:15 GMT

கோவிட் பெருந்தொற்று தொழிலாளர்கள் அனைவரையும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களை, வெகுவாக பாதித்துள்ளது ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதருவது; வாழ்வாதாரத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பது; ஆகியவற்றின் அவசியம் காரணமாக, கோவிட்-19 பாதிப்பை சமாளிப்பது மேலும் சவாலானது.

பல்வேறு பிரிவுகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக கவனம் செலுத்தும் வகையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் 20 ஜூன் 2020 அன்று தொடங்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் ஏறத்தாழ 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் திரும்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 31 மாவட்டங்களில் 25000க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களும் இதில் அடங்கும். மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும், இதர தொழில்துறை மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்காக ஆத்ம நிர்பார் உத்தரப்பிரதேச ரோஜ்கார் திட்டம் ஒன்றை உத்தரப்பிரதேச அரசு உருவாக்கியுள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, உள்ளூர்த் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக தொழில்துறை அமைப்புகளுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது, இதர அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் இத்திட்டம் தீவிர கவனம் செலுத்தும்.

இத்திட்டத்தை பிரதமர் 26 ஜூன் 2020 அன்று காலை 11 மணிக்கு காணொளி மாநாடு மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் முன்னிலையில் துவக்கி வைப்பார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் இந்த மெய்நிகர் துவக்க விழாவில் பங்கேற்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் 6 மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் பொதுச் சேவை மையங்கள், கிருஷி விஞ்ஞான் கேந்திரங்கள் ஆகியவை மூலமாக இந்நிகழ்ச்சியில் இணைந்து கொள்வார்கள். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விலகியிருத்தல் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும். 

Similar News