புதுச்சேரியில் ஒரே நாளில் 30நபர்களுக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியான அரசு.!
புதுச்சேரியில் ஒரே நாளில் 30நபர்களுக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியான அரசு.!
புதுச்சேரி மாநிலத்தில் நாளில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 245 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆகவும் உயர்ந்துள்ளது. 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த தட்டாஞ்சாவடி விவிபி நகரை சேர்ந்த மேலும் ஒரு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல் தெரிவிக்கும்போது
புதுச்சேரியில் ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்துடன் தொடர்புடைய 7 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 109 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டு கரோனா தொற்றுடன் கடந்த 2 ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தட்டாஞ்சாவடி விவிபி நகரை சேர்ந்த 80 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் ஜிப்மர் லாண்டரியில் வேலை செய்த நபரின் தாத்தா ஆவார். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 5 பேர் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அரசு மருத்துவ கல்லூரியில் 2 பேரும், ஜிப்மரில் 8 பேர் என 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவற்றில் 7 பேர் மருத்துவர்கள் ஆவர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 109 ஆக அதிகரித்துள்ளத.
இன்று பாதிக்கப்பட்ட 30 பேரில் 25 பேர் கதிர்காமம் மருத்துவ கல்லூரியிலும், 3 பேர் ஜிப்மரிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையிலிருந்து காரைக்காலுக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் 100 பேரும், ஜிப்மரில் 20 பேரும், காரைக்காலில் 6 பேரும், மாஹே பிராந்தியத்தில் 4 பேரும், பிற பகுதியில் ஒருவரும் என 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.