30 ஆண்டுகளாக நாள்தோறும் 15 கி.மீ நடந்து சென்று தபால்களை வழங்கிய தபால்காரர் - பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி.!

30 ஆண்டுகளாக நாள்தோறும் 15 கி.மீ நடந்து சென்று தபால்களை வழங்கிய தபால்காரர் - பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி.!

Update: 2020-07-12 07:02 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக தபால் துறையில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தான் ஓய்வு பெற்றார். தபால்காரர் சிவனின் வாழ்க்கையில் பல சவால்களையும் சுமந்து கடிதங்களையும் வழங்கியுள்ளார்.

தபால்காரர் சிவன் தினந்தோறும் 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காடுகளில் பயணம் செய்து மக்களுக்கு தபால்களை வழங்கி வந்தார். இவர் செல்லும் காடுகளில் யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளது. அதனை எல்லாம் கடந்து தினந்தோறும் வேலை பார்த்து வந்தார். தபால்காரர் சிவனுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர்.



தபால்காரர் சிவனை பற்றி ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதன் பின்னர் பெரும்பாலானோர் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நம்முடைய தேசத்திற்கு அவர் செய்த பணி மிகவும் பாராட்டுக்குரியது மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



தற்போது ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவின் ட்விட்டர் பதிவை ஷேர் செய்த சிரஞ்சீவி; அதில் அவர் கூறியது: பல மக்களுக்கு அனைத்து கஷ்டங்களையும் மீறி அவருடைய வேலையைச் செய்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. அத்தகைய பெரிய மனிதர்களுக்கு நன்றி, மனிதநேயம் செழிக்கிறது என பதிவிட்டுள்ளார்.  

Similar News