திருப்பதி ஜூலை ரூ.300 தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் - தேவஸ்தானம் அறிவிப்பு.! #Thirupathi #Specialdharsan

திருப்பதி ஜூலை ரூ.300 தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் - தேவஸ்தானம் அறிவிப்பு.! #Thirupathi #Specialdharsan

Update: 2020-06-29 03:18 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கோவிலில் டைம் ஸ்லாட் டோக்கன், ரூ.300 டிக்கெட் ஆகியவற்றில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதில் டைம் ஸ்லாட் டோக்கன்கள் நேரிலும், ஆன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.300 டிக்கெட் மட்டும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அடுத்த மாதத்திற்கு (ஜூலை) ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக இன்று (திங்கட்கி ழமை) ரூ.300 டிக்கெட் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன்கள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளிலும், அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட உள்ளன.

அதில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒரு நாள் முன்கூட்டியே வந்து டைம் ஸ்லாட் டோக்கனை பெற வேண்டும். இந்தத் தகவலை திரு மலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News