கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ரூ.3000 கோடி வழங்கும் இந்தியா - குவியும் பாராட்டுக்கள்.!

கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ரூ.3000 கோடி வழங்கும் இந்தியா - குவியும் பாராட்டுக்கள்.!

Update: 2020-07-26 03:13 GMT

உலகில் கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிப்படைந்து வருகிறது. அதன் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆகவே பல சிறிய நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் உதவியை நாடி வருகிறது. இலங்கையில் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு அரசு இந்தியாவின் உதவியை நாடியது. அதன்படி இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பரஸ்பர சிந்தனைத் திட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3000 கோடி பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று இலங்கை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பந்துலா குணவா்த்தனே கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக இரு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கி மட்டத்திலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மட்டத்திலும் பல்வேறு கட்டங்களாக பேசுவது நடந்து வந்தது. இந்த ஒப்பந்தம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுவதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கடனை திருப்பி செலுத்துவதை மறுசீரமைப்பு தொடர்பாக இருதரப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News