ஜியோ நிறுவனத்தில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்.!

ஜியோ நிறுவனத்தில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்.!

Update: 2020-07-15 10:32 GMT

ஜியோ நிறுவனத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றது. சென்ற ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடி ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து 9.99% பங்குகளை வாங்கியுள்ளது.

இதை அடுத்து பல நிறுவனங்கள் முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியது.


இந்நிலையில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூபாய். 33,737 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது .

ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.   

Similar News