350 சீனா ராணுவ வீரர்களை புரட்டி எடுத்த 100 இந்திய ராணுவ வீரர்கள் - எல்லைப் பிரச்சினை பற்றி புதிய தகவல்.!

350 சீனா ராணுவ வீரர்களை புரட்டி எடுத்த 100 இந்திய ராணுவ வீரர்கள் - எல்லைப் பிரச்சினை பற்றி புதிய தகவல்.!

Update: 2020-06-22 05:04 GMT

இந்திய-சீனா மோதல் பிரச்சனையில் சீனா நாட்டின் 350 வீரர்களை இந்தியாவின் 16 பிஹாரி ரெஜிமென்ட் படையின் 100 வீரர்கள் அவர்களை புரட்டி எடுத்துள்ளனர் என் தகவல் கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததில் சீனா தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மோதலுக்கு முன்பே இந்தியா-சீனா ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய எல்லை உட்பட்ட பகுதியில் சீனா ராணுவம் பலகை மூலம் வைத்திருந்த அறிவிப்பை நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 16 பிஹாரி ரெஜிமென்ட் படை வீரர்கள் அந்த பலகையை வைத்து இருந்த பகுதிக்கு சென்று சீனா ராணுவத்திடம் அதை அகற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், சீனா ராணுவம் மறுப்புத் மறுத்துள்ளது. பின்னர் அங்கிருந்து இந்திய ராணுவத்தினர் திரும்பி வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ராணுவத்தின் 50 வீரர்கள், 16 பிஹாரி ரெஜிமென்ட் படையணியின் 50 வீரர்கள் ஆகிய 100 வீரர்களும் சீனா ராணுவம் இருக்கும் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு 10 முதல் 15 சீனா வீரர்கள் மட்டும் தான் இருந்துள்ளனர். பின்னர் அப்போது சுமார் 300 சீனா வீரர்கள் குவிந்துள்ளனர். இந்திய ராணுவத்தினர் இந்திய கட்டுப்பாட்டுக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் படி சீன ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம் பேசிப் பார்த்தால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து இந்திய வீரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கியுள்ளனர். முன்பு தாக்குதல் நடத்த சீனா வீர்ரகள் தயாராக வைத்திருந்த இரும்பு ராடு, கற்கள் போன்ற ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர்.

அதில் முதலில் ஹவில்தார் பழனி மற்றும் 16 பிஹாரி ரெஜிமென்ட்' கமாண்டிங் அதிகாரி மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இதனை அடுத்து கோபமடைந்த இந்திய வீரர்கள் சீனாவுக்கு சரியான பதிலடி அளித்துள்ளனர். பின்னர் சுமார் 350 சீனா வீரர்களை 100 இந்திய வீரர்களை துவம்சம் செய்து உள்ளனர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த மோதலில் சீனா நாட்டிற்கு பலத்த அடி கிடைத்துள்ளது. பின்பு இந்திய வீரர்கள் குடில்கள், பிளக்ஸ்கள், பலகைகளை ஆகியவற்றை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் கூறுகிறது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2562129  

Similar News